வவுனியாவில் வர்த்தக நிலையத்தில் திடீர் தீவிபத்து!

Date:

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள பலசரக்கு விற்பனை நிலையம் இன்று (28) மாலை தீபிடிந்து எரிந்தமையால் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியது.

குறித்த வர்த்தக நிலையம் இன்று மாலை திறக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாலை 5 மணியளவில் திடீரென்று கடை தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனை அவதானித்த அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் கிராமமக்கள் தீயை அணைப்பதற்கு கடுமையான முயற்சிகளை எடுத்தபோதும் வியாபார நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் முற்றாக எரிந்து சாம்பலாகியது.

சுமார் 6 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்துள்ளதாக வியாபார நிலைய உரிமையாளரால் தெரிவிக்கப்படுகின்றது.

மின்சார ஒழுக்கி தீவிபத்திற்கு காரணமாக இருக்கும் என்று தெரிவிக்கப்படும் நிலையில் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மஹரகம வீட்டில் தீவிபத்து: 3 பேரின் மரணத்தின் காரணம் வெளியானது!

மகரகம, பமுனுவ வீதியில் உள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில்...

கயிறிழுத்தல் போட்டியில் உயிரிழந்த இளைஞன்

கொஸ்வத்த பொலிஸ் பிரிவில் உள்ள மிகஹாவெல கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கயிறு...

அணு ஆயுதங்கள் அல்ல, ஈரானின் பலமாக மாறிய புவியியல் அமைவிடம்

ஈரானிடம் அணு ஆயுதம் இல்லாமல் இருக்கலாம் — ஆனால், அத்தகைய நீர்வழிகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்