27.7 C
Jaffna
September 22, 2023
இலங்கை

வடமராட்சி தனியார் வைத்தியசாலை மருத்துவ பணியாளருக்கு கொரோனா!

வடமராட்சியிலுள்ள தனியார் வைத்தியசாலையின் மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் ஒருவர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார்.

இன்று வடக்கில் மேற்கொள்ளப்பட்ட கொரொனா பரிசோதனையில் வடக்கில் 7 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளது கண்டறியப்பட்டது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ் பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 659 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் ஒருவர், மன்னார் மாவட்டத்தில் 5 பேர், வவுனியா மாவடத்தில் ஒருவர் தொற்றிற்குள்ளாகினர்.

யாழ் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டவர் நவாலி பகுதியை சேர்ந்தவர். அவர் வடமராட்சி, நெல்லியடி ரூபின்ஸ் தனியார் வைத்தியசாலையில் மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளராக பணியாற்றி வருகிறார்.

அவரது மனைவி சண்டிலிப்பாய் பகுதியில் பாடசாலையொன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0

இதையும் படியுங்கள்

‘கைது செய்யும் அதிகாரத்தை பிறரின் தேவையை நிறைவேற்ற பயன்படுத்தக்கூடாது’: தமிழ் வர்த்தகரை கைது செய்த சிஐடி அதிகாரிகள் நட்டஈடு வழங்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

சர்வதேச விசாரணை கோரி யாழில் போராட்டம்

Pagetamil

‘ஆள் சிக்காததால் மஹிந்தவை பிரதமராக நியமித்தேன்’: மைத்திரி

Pagetamil

சாலே மிடில் ஓர்டர்; கோட்டாவும், மைத்திரியுமே ஓபனிங்: பொன்சேகா!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!