ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பொகவந்தலாவ, டின்சின் தமிழ் மகா வித்தியாலய அதிபர், தாக்குதலுக்குள்ளனான நிலையில் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம், நேற்று (27) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்றும் பொகவந்தலாவ மோரா தோட்டப் பகுதிக்குச் சென்று, இம்முறை கல்விப் பொதுத்தராதர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களைச் சந்தித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிவந்துகொண்டிருந்த போதே, நான்கு பேர் கொண்ட கும்பலால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இது தொடர்பாக, பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.பாடசாலையில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாகிய 10ஆம் ஆண்டு மாணவன் ஒருவனின் உறவினர்களே தாக்குதலின் சூத்திரதாரிகள் என தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் நடத்திய கும்பலைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.