இலங்கை தனது அரசியல் ஸ்திரத்தன்மையையும் தேசிய ஒற்றுமையையும் பேணும் என்று சீனா நம்புகிறதாம். சீனாவின் வெளிவிகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின்னிற்கே இந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாம்.
நட்பு அண்டை நாடாக, இலங்கை அரசியல் ஸ்திரத்தன்மை, தேசிய ஒற்றுமையை பேணும் என்றும், அது தேசிய வளர்ச்சியில் அதிக சாதனைகளை செய்யும் என்றும் சீனா உண்மையிலேயே நம்புகிறது என்றும் அவர் கூறினார்.
செய்தியாளர் சந்திப்பொன்றில் இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
“மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும், நிலையான சமூக பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதற்கும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதற்கும், தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை சீனா பாராட்டுகிறது,” என்று அவர் கூறினார்.
சீனாவின் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மனித உரிமைகள் குறித்து இரட்டைத் தரத்தை அரசியல் மயமாக்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் சீனா தொடர்ந்து எதிர்க்கிறது. பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட மனித உரிமை பிரச்சினைகள் என்ற பெயரை பயன்படுத்துகிறார்கள்.
“அனைத்து நாடுகளும் ஐ.நா சாசனத்தின் நோக்கங்களையும் கொள்கைகளையும் கடைப்பிடிக்க வேண்டும், மற்ற நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும், அரசியல் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் முயற்சிகள் மற்றும் மற்றவர்களின் உள் விவகாரங்களில் தலையிடும் மற்றும் அரசியல் அழுத்தத்தை செலுத்தும் நகர்வுகளை நிராகரிக்க வேண்டும்,” .
ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு மூலம் அனைத்து நாடுகளும் மனித உரிமைத் துறையில் உள்ள வேறுபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று வாங் வென்பின் கூறினார்.