தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் தொடர்பான உரையரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றுள்ளது.
நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்ற இவ்வுரையரங்கில் மரபுரிமை அரசியல் என்ற தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைச் சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி பரமு புஸ்பரட்ணம் உரையாற்றினார்.
வனவள அரசியல் என்ற தலைப்பில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், ஜெனீவா அரசியல் என்ற தலைப்பில் நிலாந்தனும் உரையாற்றினார்கள்.
தொடர்ந்து யாழ் மறைமாவட்டக் குரு முதல்வர் வண. பிதா. யோசப்தாஸ் ஜெபரட்ணம் சிறப்புரை ஆற்றினார்.
மரபியலாளர் ஜீ.ஜெயதீஸ் தலைமையில் நடைபெற்ற இவ்வுரையரங்கு நிகழ்ச்சி கொரோனா நோய்த் தொற்றுத் தடுப்புச் சுகாதார நடைமுறைகளைப் பேணி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1