27.9 C
Jaffna
December 12, 2024
Pagetamil
உலகம்

ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவன சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா அவசர கால அனுமதி

ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் தயாரித்துள்ள சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா அவசர கால அனுமதி வழங்கியுள்ளது.

உலகம் முழுவதும் ஓராண்டுக்கும் மேலாக பெரும் சவாலாக இருக்கும் கொரோனா தொற்றை சமாளிக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றன.

இந்தியாவிலிருந்த தரப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசி இலங்கையில் பயன்பாட்டில் உள்ளது. இந்த தடுப்பூசி இரண்டு தவணைகளாக வழங்கப்படக் கூடிய தடுப்பூசிகள். முதல் டோஸ் செலுத்தி, 4 வாரங்களுக்கு பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்த வேண்டும்.

உலகளவில் பயன்பாட்டில் இருக்கும் ஃபைஸர், மொடர்னா, ஸ்புட்னிக் 5 போன்ற இன்னும் பல தடுப்பூசிகளும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளே.

இந்நிலையில், ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் மட்டுமே ஒரே டோஸாக வழங்கப்படும் கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது.

இந்தத் தடுப்பூசிக்கு அமெரிக்கா, அவசர கால பயன்பாடு அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளது. வரும் மார்ச் இறுதிக்குள் தங்களின் சிங்கிள் டோஸ் தடுப்பூசியை 2 கோடி பேருக்கு விநியோகிக்க முடியும் என ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசிக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை அனுமதியளித்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கர்களுக்கு இது நற்செய்தி. கொரோனா நெருக்கடி முடிவு காண முற்படும் நம் முயற்சிகளுக்கு இது ஊக்கமளிக்கும் செய்தி எனத் தெரிவித்துள்ளார்.

ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி பரிசோதனையில் கொரோனா தடுப்பில் 85.9% பலனளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், ஒப்பீட்டளவில் அமெரிக்காவில் தற்போது பயன்பாட்டில் உள்ள ஃபைஸர், மொடர்னா தடுப்பூசிகள் 95% அளவுக்கு பலனளிப்பதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தென்கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தற்கொலை முயற்சி

Pagetamil

எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

east pagetamil

சிரியா ஜனாதிபதி மொஸ்க்கோவில் தஞ்சம்

east pagetamil

14 வயது சிறுவனால் வரையப்பட்ட ஓவியம் – கவிழ்க்கப்பட்டது சிரியா ஆட்சி

east pagetamil

சிரியா முன்னாள் ஜனாதிபதி அசாத் பற்றிய மர்மம் விலகியது: ரஷ்யா புகலிடம் அளித்துள்ளது!

Pagetamil

Leave a Comment