தமிழ் கட்சிகளின் ஒற்றுமை முயற்சியென்பது தேர்தல் கூட்டணியல்ல. ஆனால், வெறுமனே கூடிக்கலையும் கூட்டங்களையும் நடத்த தயாரில்லை. ஒரு முறையான கட்டமைப்பு அவசியம். புதிய கூட்டணியில் இணையும்படி இலங்கை தமிழ் அரசு கட்சியிடம் வற்புறுத்த மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
தமிழ் கட்சிகள் கூட்டாக இணைந்து தேர்தலை சந்திக்கக் கூடாது, புதிய கூட்டணி உருவாக்கக்கூடாது என இலங்கை தமிழ் அரசு கட்சி தீர்மானித்துள்ளது குறித்து, தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தாவை தொடர்பு கொண்டு தமிழ் பக்கம் வினவிய போது, இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவது என்பது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான திட்டமிட்ட வேலைத்திட்டங்களை கொண்டிருக்க வேண்டும். எமது இலக்கு என்ன என்பதையும், அதை அடைவதற்கான வழிவகைகள் என்ன என்பதையும் தெரிந்திருக்க வேண்டும்.
நாம் சில்லறை அரசியல்வாதிகளாக செயற்பட போகிறோமா?, அல்லது மக்களிற்கான அரசியல் செய்யப் போகிறோமா என்பதே கேள்வி. மக்களின் அரசியல் பிரச்சனைகளை கையாள ஸ்தாபனப்பட்ட அமைப்பொன்றே எமக்கு தேவை. மக்களிற்கான அரசியலில் தேர்தல் பற்றிய பேச்சு அவசியமே தேவையில்லை. இந்த கூட்டிற்கு தமிழ் அரசு கட்சி தயாரில்லையென்றால் அவர்களை வற்புறுத்த மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
அவர் தமிழ் பக்கத்திற்கு தெரிவித்த கருத்தின் ஒலி வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.