களுவாஞ்சிகுடியில் வளவொன்றினுள் மனிதத்தலை வீசப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவரையும் பதினான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் தலையை மீண்டும் அதே இடத்தில் புதைப்பதற்கும் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி பிறப்பித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழக்கிழமை இரவு ஏழு மணியளவில் தனது வீட்டு முன் வீதியில் நின்று கொண்டிருந்த வீட்டின் உரிமையாளருக்கும் அதேவீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற மூன்று இளைஞர்களுக்கும் இடையில் காரசாரமான வாய்த்தக்கம் ஏற்பட்டது.
சம்பவ இடத்திலிருந்து சென்ற இளைஞர்கள் இரவு 9.30 மணியளவில் அந்த வீட்டு வளவிற்குள் மனித தலையொன்றை வீசிவிட்டு தப்பியோடினர்.
இதனையடுத்து வீட்டு உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். முறைப்பாட்டிற்கு அமைய சம்ப இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்படி சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் போரில் மூன்று இளைஞர்களை கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்படவர்களிடம் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையின் போது, தம்முடன் முரண்பட்டவரை மிரட்ட களுவாஞ்சிகுடி மயானத்தில் சடலமொன்றை தோண்டியெடுத்து அதிலிருந்த தலையை அகற்றி, வீட்டில் வீசியது தெரியவந்தது.
விசாரணையின் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இவர்களால் வீசப்பட்ட தலை மயானத்தில் புதைக்கப்பட்ட களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த வயோதிப தாயின் தலையென, அவரது உறவினர்களின் உதவியுடன் பொலிசாரரினால் உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து நீதவானின் உத்தரவுக்கு அமைய குறித்த தலையானது உறவினர்கள், பொலிசார், மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் ஆகியோரின் முன்னிலையில் அதே இடத்தில் மீண்டும் புதைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சடலத்திலிருந்து தலை அகற்றப்பட்டது தொடர்பில், வயோதிபப் பெண்ணின் உறவினர்களால் இளைஞர்கள் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
பழுகாமம் நிருபர்.