26.8 C
Jaffna
December 2, 2024
Pagetamil
இலங்கை

மன்னாரில் சிறுமிக்கு டெங்கு!

மன்னாரில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவருக்கே டெங்கு தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

காய்ச்சல் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையின் போது குறித்த சிறுமி டெங்கு தொற்றிற்கு உள்ளாகியமை தெரிய வந்துள்ளது.

குறித்த சிறுமி தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

நீண்ட காலத்தின் பின்னர் மன்னார் மாவட்டத்தில் புதிதாக டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பேசாலை பகுதியில் உள்ள சிறுமியின் வீடு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி மன்னார் மாவட்ட தொற்று நோய்த்தடுப்பு பிரிவினர் துரித நடவடிக்கையினை மேற்கொண்டு பேசாலையிலும், மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையிலும் புகையூட்டல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தென்மராட்சியில் 20 இடைத்தங்கல் முகாம்கள்

Pagetamil

காட்டு யானை தாக்கி கடற்படை உத்தியோகத்தர் பலி

Pagetamil

மாவீரர்தினத்துக்கு அனுமதியளித்த அனுர அரசுக்கு நன்றி

Pagetamil

மருதங்கேணி பாலம் அபாயத்தில்

Pagetamil

ஃபெங்கால் புயல் இன்று கரையை கடக்கிறது!

Pagetamil

Leave a Comment