26.7 C
Jaffna
December 11, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

தேர்தல் கூட்டல்ல; பெயரும் வைக்கக்கூடாது: தமிழ் அரசு கட்சி மத்தியகுழு தீர்மானம்!

தமிழ் மக்களின் நலனிற்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளிற்கு தமிழ் அரசு கட்சி ஒத்துழைத்து செயற்படும். எனினும், அந்த ஒற்றுமை முயற்சிகள் தேர்தல் கூட்டாகவோ, அல்லது அந்த கூட்டிற்கு ஒரு பெயர் சூட்டவோ கூடாது என இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (27( வவுனியாவில் இடம்பெற்றது.

இதன்போது, தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை முயற்சி பற்றிய விடயம் விவாதத்திற்கு எடுக்கப்பட்டது.

தற்போது மேற்கொள்ளப்படும் ஒற்றுமை முயற்சிகளிற்கு கட்சியின் கணிசமான உறுப்பினர்கள் ஆட்சேபணை தெரிவித்தனர்.

வெளியிலுள்ள சில கட்சிகளின் தோல்வியடைந்த தலைவர்கள் ஒரு தளத்தை உருவாக்க ஒற்றுமை முயற்சி மேறகொள்ளப்படுகிறது என சிலர் கருத்து தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் எம்.பி பா.அரியநேத்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரனின் பெயர் குறிப்பிட்டு கருத்து தெரிவித்தார். சுரேஷ் பிரேமச்சந்திரன் தற்போது ஒரு தளத்தை உருவாக்கவே ஒற்றுமை முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

அத்துடன், கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களே இப்பொழுது வெளியில் கட்சிகளாக உள்ளனர். ஏன் புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும்? அவர்கள் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் மீண்டும் வந்து இணைந்து கொள்ளலாமே என தெரிவித்தார்.

எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவித்த போது, இதேவிதமான கருத்தையே தெரிவித்தார். கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற அனந்தி, ஐங்கரநேசன் போன்றவர்கள் இப்பொழுது கட்சித் தலைவர்களாக ஒற்றுமை முயற்சி கூட்டங்களிற்கு வருகிறார்கள். பிரதான கட்சிகளிற்கிடையில்தான் முதலில் ஒற்றுமை ஏற்பட வேண்டும். பாராளுமன்ற அங்கத்துவத்தை கொண்ட 3 கட்சிகள்தான் உள்ளன.

வவுனியாவில் நேற்று நடந்த கூட்டத்தில் ஐங்கரநேசன் வரவில்லை. யாரோ ஒரு சின்னப்பொடியனை அனுப்பியிருந்தார். மாவை சேனாதிராசாவும் கூட்டத்திற்கு போயிருந்தார். இப்படியான நிகழ்வுகளால் பெரிய கட்சி தலைவர்களிற்குத்தான் மரியாதையில்லாத நிலைமை ஏற்படும்.

நான் (சுமந்திரன்) கலந்து கொள்ளும் கூட்டங்களிற்கு வரமாட்டேன் என சொல்லி, கூட்டத்திலிருந்து வெளியேறிய அனந்தி, இப்பொழுது நான் கலந்து கொள்ளும் கூட்டங்களிலும் கலந்து கொள்கிறார் என்றார்.

மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் ஒலிவடிவம் இணைக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் ஒதுங்கி, புதியவர்களுக்கு வழிவிட யோசனை: புதிய அணிகள் இணைய பேச்சு!

Pagetamil

சிரியா முன்னாள் ஜனாதிபதி அசாத் பற்றிய மர்மம் விலகியது: ரஷ்யா புகலிடம் அளித்துள்ளது!

Pagetamil

சிரியா தலைநகரும் கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது: அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி முடிந்தது!

Pagetamil

திருத்தப்பட்ட அரசி விலைகள் அறிவிப்பு!

Pagetamil

இலங்கை தமிழ் அரசு கட்சியுடன் கூட்டணிப் பேச்சு… விந்தன் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்: ரெலோ தலைமைக்குழு தீர்மானம்!

Pagetamil

Leave a Comment