சாணக்கியனை கிழக்கு முதலமைச்சர் வேட்பாளராக்கினால் முஸ்லிம்களின் ஆதரவை பெறலாம்: சிறிதரன் யோசனை!

Date:

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசாவும், கிழக்கு மாகாணசபை வேட்பாளராக இரா.சாணக்கியனும் களமிறக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் யோசனை தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் இடம்பெற்ற போது, சி.சிறிதரன் இந்த யோசனையை முன்வைத்தார்.

வடமாகாணசபை தேர்தலில் மாவை சேனாதிராசா களமிறக்கப்பட வேண்டும். கடந்த மாகாணசபை தேர்தலில் அவர் தனது இடத்தை விக்னேஸ்வரனிற்கு விட்டுக் கொடுத்தார். இம்முறை அப்படியான முடிவை எடுக்கக்கூடாது. அவரது தலைமையில் இளைஞர்களை களமிறக்க வேண்டும்.

கிழக்கு மாகாணசபை தேர்தலில் இரா.சாணக்கியனை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க வேண்டும் என யோசனை தெரிவித்தார். முஸ்லிம் மக்கள் அவரை ஆதரிப்பார்கள் என்பதால், அவரை களமிறக்கி வெற்றியடையலாமென சிறிதரன் தெரிவித்தார்.

இது யோசனையளவிலேயே தெரிவிக்கப்பட்டது.

அப்போது, கிழக்கு உறுப்பினர் ஒருவர் “முஸ்லிம் மக்கள் வாக்களிப்பார்கள் என்பது சரி. தமிழ் மக்கள் வாக்களிப்பார்களா? அவர் மஹிந்த குடும்பத்தின் ஆளா இல்லையா என்ற அரசியலில் இருப்பவர்களிடமே தீரவில்லை. முதலில் அந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும். பின்னர் முதலமைச்சர் வேட்பாளர் யார் என யோசிக்கலாமென்றார்.

இரண்டு கருத்திற்கும் கூட்டத்தில் எதிர்வினையாற்றப்படவில்லை.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரான் போராட்டங்களில் 3,117 பேர் பலி

டிசம்பர் மாத இறுதியில் வெடித்த போராட்டங்களின் போது 3,117 பேர் கொல்லப்பட்டதாகவு...

விஜய்யிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை – குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்ப்பா?

டெல்​லி​ சிபிஐ தலைமை அலு​வல​கத்​தில் நேற்று ஆஜரான தவெக தலை​வர் விஜய்​யிடம்...

கற்பை நிரூபிக்க சீதை போல் மனைவியை தீக்குளிக்க வைத்த கணவன்!

குற்றமற்றவள் என நிரூபித்து காட்டு என மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்