சினிமா

விக்னேஷ்- நயன் மார்ச்சில் திருமணம்?

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள்.

அவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள தயாராகி விட்டதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருவது வழக்கமான ஒன்றாகி விட்டது.

இந்த நிலையில், தற்போது வருகிற மார்ச் மாதத்தில் நயன்தாராவும், விக்னேஷ்சிவனும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக நேற்று முதல் ஒரு செய்தி பரபரப்பாகி வருகிறது.

ஆனால் வழக்கம்போல் இந்த செய்தி குறித்து அவர்கள் இருவரும் இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அதனால் இந்த செய்தியாவது உண்மையாகுமா? இல்லை இதுவும் வழக்கம்போல் வதந்திதானா? என்பது விரைவில் தெரியவரும்.

நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகும் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் தற்போது நாயகியாக நடித்து வருகிறார் நயன்தாரா. அதோடு, அவர்கள் இருவரும் ரவுடி பிக்சர்ஸ் என்ற பேனரில் சில சிறிய பட்ஜெட் படங்களையும் தயாரித்து வருகிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மோடியின் ஆட்சியை புகழ்ந்த ராஷ்மிகா

Pagetamil

‘தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள்’: ஜி.வி.பிரகாஷ் குமார்

Pagetamil

ஜி.வி.பிரகாஷை பிரிந்தது ஏன்? – பாடகி சைந்தவி விளக்கம்

Pagetamil

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி தம்பதியினர் பிரிந்தனர்!

Pagetamil

“தெலுங்கில் நடிப்பது சிரமமாக இருந்தது” – சம்யுக்தா

Pagetamil

Leave a Comment