Pagetamil
இலங்கை

யாழ் பல்கலையில் பட்டம் பெற்ற விழிப்புலனற்றவர்கள்: குவியும் பாராட்டுக்கள்!

யாழ்.பல்கலைக்கழகத்தின் 35வது பட்டமளிப்பு விழாவில் விழிப்புலனற்றவர்களிற்கான சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இருவர் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதன்படி 2013ஆம் ஆண்டு வாழ்வகத்தில் இணைந்து கொண்ட சபேசன் கட்சணி மற்றும் அதே ஆண்டில் வாழ்வகத்தில் இணைந்துகொண்ட விஜயகுமார் விஜயலாதன் ஆகியோரே நேற்று இந்த பட்டத்தைப் பெற்றுள்ளனர்.

சபேசன் கட்சணி அரசறிவியல் துறையிலும் விஜயகுமார் விஜயலாதன் சமூகவியல் துறையிலும் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

சுன்னாகத்தில் இயங்கி வரும் விழிப்புல வலுவிழந்தோர் வாழ்வகம், கண் பார்வையற்ற, பார்வைக் குறைபாடுடையவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் தொண்டு ஸ்தாபனமாகும்.

இவ்வாழ்வக மாணவர்கள் கல்வியில் சிறந்து உயர் பெறுபேறுகள் பெற்று சாதனை புரிந்து வருகின்ற நிலையில் சாதனை படைத்த இரு மாணவர்களும் பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

இதையும் படியுங்கள்

தேசபந்துவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் பாய்கிறது!

Pagetamil

கிளிநொச்சியை உலுக்கிய சிறார் துஸ்பிரயோக குற்றச்சாட்டு: புலிகள் அமைப்பிலும் இதே குற்றச்சாட்டை சந்தித்தவர்!

Pagetamil

மோடி- அனுர 15 நிமிடங்கள் தொலைபேசி உரையாடல்

Pagetamil

பிக்கு உடையில் தலதா மாளிக்கைக்குள் நுழைய முயன்ற மாணவன்!

Pagetamil

18 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை

Pagetamil

Leave a Comment