இலங்கை

நெடுந்தூர போக்குவரத்து ஒழுங்கில் இறுக்கம்!

யாழ்ப்பாண நகர பகுதில் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நெடுந்துர போக்குவரத்தில் இறுக்கமான நடைமுறை பின்பற்றப்படும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வெளிமாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் பேருந்துகள் யாழ்ப்பாணம் வைத்திய சாலை வீதியால் உள் நுழைவது மற்றும் வெளிச் செல்வது மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வி.மணிவண்ணன் நடைமுறைகளை மீறுவோர் மீது பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையத்திற்கு வந்து தமது பயணங்களை மேற்கொளுமாறும் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

சவப்பெட்டிகளுடன் முள்ளிவாய்க்கால் சென்ற ஊர்தி

Pagetamil

கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் பூட்டு

Pagetamil

30 வயதிற்குட்பட்ட 30 ஆசியா பட்டியலில் இலங்கை நடிகை

Pagetamil

மன்னாரில் அதானியின் காற்றாலை மின்திட்டம்: உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் அமைப்பு மனு!

Pagetamil

மன்னார் ரின் மீன் தொழிற்சாலை மீதான குற்றச்சாட்டின் பின்னணி!

Pagetamil

Leave a Comment