இயற்கை மூலிகைகளைப் பயன்படுத்தி நம் அழகை மேம்படுத்தாலாம்
ஒரு வேப்பமரம், ஒரு மருத்துவருக்கு சமம்.
குறிப்பாக, வேப்பிலையில் அபரிமிதமான ஆன்டிசெப்டிக் குணங்கள் இருக்கின்றன. அது பருக்களைப் போக்கும் ஆற்றல் கொண்டது.
சிலர் பருக்களைக் கிள்ளிக் கிள்ளி அதனால் சீழ் பிடித்துவிடும். அதிலிருந்து நிவாரணம் பெற, வேப்பிலையில் ஆவி பிடிக்கலாம். பாத்திரத்தில் வெந்நீர் எடுத்து, அதில் 10 தளிரான வேப்பிலையைப் போட்டு (அதற்கு அதிகமாகப் போட்டால் முகம் எரியும்), இரண்டு நிமிடங்கள் ஆவி பிடிக்கவும். பின்னர் ஐஸ் க்யூப்களால் உடனே முகத்தை ஒற்றி எடுக்கவும். இப்படி ஒருநாள்விட்டு ஒருநாள் செய்துவர பருக்களால் ஏற்படும் அரிப்பும் வலியும் நின்றுவிடுவதோடு, பருக்களும் குறைந்துபோகும்
வேப்பிலையை பேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம்.
இளம் தளிரான வேப்பிலை – 5, ஊற வைத்து அரைத்த பாதாம் விழுது – ஒரு டீஸ்பூன், பால் – சிறிதளவு… இந்த மூன்றையும் நன்கு கலந்து க்ரீம்போல ஆக்கவும். இதை முகத்தில் பேக் போலப் போட்டு வர பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்..