சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து இரண்டு சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளன். கோப்பாய் பிரதேசத்திலிருந்த அவர்கள் கடத்தி வரப்பட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தனர். சிறுமிகளின் காதலர்களும் கைது செய்யப்பட்டனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று (24) சிறுமிகள் மீட்கப்பட்டனர்.
14, 15 வயதான இரண்டு சிறுமிகளையும், ஊர்காவற்துறையை சேர்ந்த 20, 21 வயதான இரண்டு இளைஞர்கள் காதல் வலை வீசி, அவர்களின் பெற்றோர்களிடமிருந்து கவர்ந்து சென்றுள்ளனர்.
சில நாட்களாக நாவற்குழியிலுள்ள வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1