அவல் கொழுக்கட்டை செய்வது எப்படி
தேவையான பொருட்கள்.
சிவப்பு அவல் – ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒன்று
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு
ஊறவைத்த கடலைப்பருப்பு –ஒரு டேபிள்ஸ்பூன் (விருப்பமெனில்)
ஊறவைத்த கறுப்பு உளுந்து –ஒரு டேபிள்ஸ்பூன் (விருப்பமெனில்)
உப்பு – தேவையான அளவு
15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்!
செய்முறை:
சிவப்பு அவலைச் சுத்தம் செய்து தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து மஸ்லின் துணியைப் பயன்படுத்தி தண்ணீரைப் பிழிந்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் அவலுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, ஊறவைத்த கடலைப்பருப்பு, ஊறவைத்த உளுத்தம்பருப்பு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். பின்னர் இவற்றைக் கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவைக்கவும். சட்னியுடன் பரிமாறவும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1