உலகம்

வேலைக்கு செல்லாமலிருக்க தன்னைத்தானே கடத்திய இளைஞன்!

அமெரிக்காவில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே வெட்டியாக.இருக்க ரூம் போட்டு யோசித்தவர், இப்பொழுது சிறிய சிறைக்கூண்டுக்குள் கம்பி எண்ணி வருகிறார்.

அமெரிக்காவின், அரிசோனாவில் உள்ள கூலிட்ஜ் நகரைச் சேர்ந்தவர் பிரண்டன் சோல்ஸ்.19 வயதாகும் இவர், வேலைக்குச் செல்வதைத் தவிர்க்க ஒரு சுவாரசியமான திட்டத்தை அரங்கேற்றினார்.

கூலிட்ஜ் நகரத்தில் கை கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணியுடன் இளைஞர் ஒருவர் வீதியில் போடப்பட்டள்ளதாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அங்கு சென்ற பொலிசார் அந்த இளைஞரை மீட்டு விசாரித்தனர். விசாரணையில் அந்த இளைஞர், பிரண்டன் சோல்ஸ் என்று தெரியவந்து.

முகமூடி அணிந்த இரண்டு பேர் தன்னை காரில் கடத்திச் சென்று, மண்டையில் அடித்து வீதியில் வீசி சென்றதாகவும் பிரண்டன் சோல்ஸ் பொலிசாரிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து விசாரணையை முடுக்கிவிட்ட பொலிசாரும் குற்றவாளிகளைத் தேடி அலைந்து வந்தனர். ஆனால் எந்த ஆதாரமும் சிக்கவில்லை.

இதனால் பிரண்டன் சோல்சில் இலேசான சந்தேகத்துடன் விசாரணை நடத்தியபோது, வேலையிலிருந்து தப்பிக்க அவர் கடத்தல் நாடகம் அரங்கேற்றியது தெரியவந்தது. வேளைக்கு செல்லாமல் எஸ்கேப் ஆக தன்னை தானே கடத்தியுள்ளார் பிரண்டன்.

இதனைத் தொடர்ந்து பிரண்டன் சோல்சை பொலிசார் கைது செய்தனர். அவருக்கு 550 அமெரிக்கா டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பிரண்டன் சோல்ஸ் இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அமெரிக்காவில பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2வது நபர்

Pagetamil

பாலஸ்தீனத்தின் ரமல்லாவில் தூதரகத்தை திறக்கும் கொலம்பியா

Pagetamil

பாலஸ்தீன தனிநாட்டை அங்கீகரிப்பதாக அயர்லாந்து, நோர்வே, ஸ்பெயின் அறிவிப்பு!

Pagetamil

மோசமான காலநிலையால் 68,000 பேர் பாதிப்பு: மரம் முறிந்து 2 பெண்கள் பலி!

Pagetamil

இறந்து போன குட்டியை 3 மாதங்களாக சுமந்து வரும் சிம்பன்சி குரங்கு!

Pagetamil

Leave a Comment