Pagetamil
உலகம்

மீண்டும் கார் விபத்தில் சிக்கிய டைகர் வூட்ஸ்!

பிரபல கோல்ப் விளையாட்டு வீரர் டைகர் வூட்ஸ் கார் விபத்தில் சிக்கிப் படுகாயம் அடைந்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ரோலிங் ஹில்ஸ் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 7.12 மணியளவில் டைகர் வூட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது.

டைகர் வூட்ஸின் இரு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்து இல்லை என்றும், காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது ஒரு காலில் எலும்பு முறிவும், மறுகாலில் கணுக்கால் சிதைவும் ஏற்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் போதைப்பொருள் பாவித்திருந்தாரா என்பதை அறிய சோதனை மேற்கொள்ளப்படும்.

விபத்து சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு முதன்முதலாக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர், டைகர் வூட்ஸ் உயிருடன் இருப்பது ஆச்சரியமானது என்றார்.

“நான் சம்பவ இடத்திற்கு வந்தபோது வூட்ஸ் ஓட்டுநர் இருக்கையில் இருந்தார்.

அவரால் என்னுடன் பேச முடிந்தது. அவர் அமைதியாகவும் தெளிவாகவும் தோன்றினார். தீயணைப்புத் துறை சம்பவ இடத்திற்கு வரும் வரை நான் திரு உட்ஸை அமைதியாக வைத்திருந்தேன்.

அவர் தனது பெயர் டைகர் என்று என்னிடம் கூறினார், அந்த நேரத்தில் நான் உடனடியாக அவரை அடையாளம் கண்டுகொண்டேன். அவர் தெளிவாகவும் அமைதியாகவும் தோன்றினார்.

‘அவரது காயங்கள் குறித்து அவர் கவலைப்படவில்லை, இது கார் விபத்துக்களில் பொதுவானது. அவர்கள் அதிர்ச்சியில் இருக்கலாம்“ என்றார்.

அமெரிக்காவைச் சேர்ந்த டைகர் வூட்ஸ் கோல்ப் விளையாட்டில் 15 முறை சம்பியன்ஷிப் பட்டங்களை வென்றவர். வூட்ஸ் கடைசியாக 2019ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல கோல்ப் வீரரான டைகர் உட்ஸ் ஏற்கனவே ஒருமுறை கார் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

‘பாகிஸ்தானுக்குள் ஏதேனும் சாகசம் செய்ய முயன்றால்…’: இந்தியாவின் அடிவயிற்றை கலங்க செய்யும் பாகிஸ்தானின் எச்சரிக்கை!

Pagetamil

சமாதான பேச்சுக்கு தீங்கு விளைவிக்கிறார்: ஜெலன்ஸ்கியை கடுமையாக சாடிய டிரம்ப்!

Pagetamil

அணுசக்தி பொருட்களைப் பயன்படுத்தாமல் பேரழிவு தரும் ஹைட்ரஜன் குண்டை உருவாக்கும் சீனா

Pagetamil

வத்திக்கான் தேவாலய புகை போக்கியில் வெண் புகை, கரும்புகை வந்தால் என்ன அர்த்தம்?: புதிய போப் தெரிவு செய்யப்படும் பாரம்பரிய முறை!

Pagetamil

போப் பிரான்ஸிஸ் காலமானார்!

Pagetamil

Leave a Comment