பேராதெனிய பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க மகாவாச பனை ஓலைச் சுவடியை உலக பாரம்பரியமாக பெயரிட யுனெஸ்கோ முடிவு செய்துள்ளது.
பேராதெனிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் உபுல் திசனாயக்க, இதனை தெரிவித்துள்ளார்.
பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சேகரிப்பில் கிட்டத்தட்ட 800,000 புத்தகங்கள் மற்றும் 2,500 அரிய பனை ஓலைச் சுவடிகள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் மிகப் பழமையான பனை ஓலைச்சுவடியாக கருதப்படும், விசுத்திமக திக்கவும் சேகரிப்பில் உள்ளது என்றார்.