பூஜையறையை சரியான திசையில் அமைக்கப்பட வேண்டும் என சொல்லுகிறது ஜோதிட சாஸ்திரம்.
பூஜையறை இருக்க வேண்டிய திசைகள்.
- தென்கிழக்கு பகுதி
- வடமேற்கு பகுதி
- தெற்கு நடுப்பகுதி
- மேற்கு நடுப்பகுதி
இந்த இடங்களில் மட்டுமே பூஜையறை வரவேண்டும். இந்தப் பகுதியில் வரக்கூடிய பூஜையறையினால் மட்டுமே பல நன்மைகள் வந்து சேரும்.
வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பூஜையறை வைப்பதால் ஏற்படும் விளைவுகள்…
- ஆண்கள் நல்ல வேலைக்கு போகமுடியாத நிலை ஏற்படும். சில சமயம் ஆண்களுக்கு வேலையே இல்லாமல் கூட போக நேரிடும்.
- குடும்ப உறவுகளில் பிரிவினை ஏற்படும். அதாவது தந்தை, மகன் உறவு பாதிப்பு, கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உருவாகும்.
- உடல் நிலை பாதிப்பு, விபத்து போன்றவைகள் கூட ஏற்பட வாய்ப்புண்டு.
- குழந்தை பிறப்பு தள்ளிப் போதல், தத்து எடுக்கும் சூழ்நிலை கூட ஏற்படலாம்.
- வியாபாரத்தில் நஷ்டம் அல்லது வியாபாரம் தொடர்ந்து செய்ய முடியாமல் போவது.
- கடன் சுமை, கொடுக்கல் வாங்கலில் சிக்கல்.
- வெளியூர் அல்லது வெளிநாட்டிலேயே கணவன் தங்கிவிடுவது.
- பில்லி சூனியம், செய்வினை மீது தேவையற்ற நம்பிக்கை வைப்பது.
- வீட்டில் உள்ள பெண்கள் எப்பொழுதுமே கோயில் கோயிலாகச் சுற்றுவது.
- தன்னுடைய சொத்தை அல்லது தன்னுடைய முழு வருமானத்தை கோவிலுக்கோ, மடத்துக்கோ எழுதி வைப்பது போன்றவைகள் நடக்க நேரிடும்.
வீட்டில் பூஜையறை வைக்கும் முன்பு அனுபவம் வாய்ந்த வாஸ்து நிபுணரின் ஆலோசனைக்குப் பிறகு வைப்பது சிறப்பு.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1