அமெரிக்காவின் வரலாறு காணாத உறைபனி காரணமாக நயாகரா நீர் வீழ்ச்சியில் பனி உறைந்து காணப்படுகிறது.
டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இந்த பனியின் காரணமாக மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். சுமார் 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 20 க்கும் அதிகமானவர்கள் பனிக்கு பலியாகி உள்ள நிலையில் உண்மையான பலி எண்ணிக்கை கூடுதலாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை பெரும் பேரழிவு என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த சனிக்கிழமை அறிவித்தார்.
இந்த நிலையில் நயாகரா நீர் வீழ்ச்சி உறைபனி காரணமாக உறைந்து காணப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1