தமது அமைப்பை தடை செய்ய வேண்டுமென உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டால், அது தொடர்பில் எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய ஞானசாராதேரர், பல சிவில் மற்றும் மத அமைப்புகளுக்கு தடை விதிக்க ஆணைக்குழு பரிந்துரைத்ததாகக் கூறப்பட்ட செய்திகள் தொடர்பில் பதிலளித்தார்.
தான் ஆணைக்குழுவின் அறிக்கையைப் பார்க்கவில்லை என்றும், காதி நீதிமன்றங்கள் மற்றும் ஹலால் சான்றிதழ் மற்றும் குழந்தை திருமணங்கள் போன்ற பிற விதிமுறைகளை செயல்படுத்த அனுமதித்ததாக அரசியல்வாதிகள் மீது தான் தொடர்ந்து குற்றம் சாட்டினார் என்றும் கூறினார்.
அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள அமைப்பு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.