இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தற்போதைய நிலைமைகளை மதிப்பீடு செய்து, அதன் செயல்திறனை மேம்படுத்த பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவினால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சுங்கத்திணைக்களத்தின் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்வது மற்றும் சுங்கத்திற்கு எதிரான முறைகேடுகளைத் தடுப்பது, திறமையான மற்றும் பயனுள்ள சேவைகளை வழங்குவது குறித்த பரிந்துரைகளை வழங்குவது ஆணைக்குழுவின் பணியாகும்.
சுங்க தொழிற்சங்கங்களால் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களை மறுஆய்வு செய்வது உட்பட பொதுமக்கள் மற்றும் பிற தரப்புக்களின் கருத்துக்களை கேட்கவும் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
இந்த ஆணைக்குழுவிற்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஷிரன் குணரத்ன தலைமை தாங்குகிறார். மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ, உயர் நீதிமன்ற நீதிபதி டமித் தொட்டவத்த, இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர் கே.எம்.எம் சிறிவர்தன, மூத்த ஆலோசகர் சனத் ஜெயநெத்தி மற்றும் இலங்கை சுங்க முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகம் பி.ஏ. டயஸ் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றதும், அரச சேவையை வினைத்திறனுடையதாக்கப் போவதாக குறிப்பிட்டு, தனக்கு நெருக்கமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவர் பணிப்பாளராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தப்பது.