24.8 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

சுகாதாரசேவையில் முறையற்ற நிமனத்தை எதிர்த்து பணிப்புறக்கணிப்பும், ஆர்பாட்டமும்!

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் தெரிவுசெய்யப்பட்டவர்கள் சுகாதாரசேவைக்குள் நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா வைத்தியசாலையின் சுகாதாரபணி உதவியாளர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்ததுடன்,ஆர்பாட்டம் ஒன்றிலும் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்பாட்டம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,

முறையற்ற வகையிலேயே குறித்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளது.இவர்களை விட அனுபவமான பலர் பலவருடங்களாக வைத்தியசாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

இதேவேளை சுகாதாரபணி உதவியாளர்களாக பணிபுரிந்த பலருக்கு நிரந்தர நியமனங்கள் கூட இன்னும் கிடைக்கவில்லை.

தற்போது நியமிக்கப்படவுள்ளவர்களிற்கு அடிப்படை சம்பளம் எங்களை விட அதிகமாக உள்ளது.எனவே இது ஆட்சேர்ப்பு விதிமுறைகளிற்கு எதிரான ஒரு செயற்பாடகவே நாம் பார்க்கின்றோம்.எனவே ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் உள்ளீர்க்கப்படும் ஊழியர்கள் சுகாதார துறைக்குதேவையில்லை. அல்லது அதனை நீதியான முறையில் முன்னெடுக்கவேண்டும் என்றனர்.

ஆர்பாட்டத்தில்ஈடுபட்டவர்கள் சுகாதார ஊழியர்களை புறக்கணிக்காதே! எமதுஉரிமையை எமக்குவழங்கு! முறையற்ற நியமனம் வேணாம்!!மனஅமைதியுடன் பணிசெய்யவிடு,கடமை ஒழுங்கை சீர்குலைக்காதே போன்றவாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன்,கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இவர்களது பணிபுறக்கணிப்பு போராட்டம் காரணமாக வைத்தியசாலையின் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கையின் சொத்து கையிருப்பு வீழ்ச்சி

east tamil

கணவன் வெறிச்செயல்: மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!

Pagetamil

வேலைக்காக காத்திருந்து விரக்தியில் தாதி தற்கொலை

east tamil

கச்சதீவு பெருவிழாவுக்கான ஏற்பாடு

Pagetamil

GovPay ஆரம்பம்

east tamil

Leave a Comment