25.9 C
Jaffna
March 29, 2024
இலங்கை

5 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஐந்து ஒப்பந்தங்கள் இன்று (23) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரின் முன்னிலையில் இரு நாட்டு பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு இடையிலான சுற்றுலா ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் முதலீட்டு சபைக்கும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் முதலீட்டு சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.டி.ஐ), மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் கராச்சி பல்கலைக்கழகம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
கொழும்பு தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் இஸ்லாமாபாத்தின் COMSATS பல்கலைக்கழகத்திற்கு இடையிலான ஒத்துழைப்பு
கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் லாகூர் பொருளாதார கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

Leave a Comment