28.6 C
Jaffna
September 22, 2023
சினிமா

ஸ்டேடியம் வாசலில் கோலி சோடா விற்ற பிகில் வில்லன்

விஜய்யின் பிகில், கார்த்தியின் கொம்பன் படங்களில் வில்லனாக நடித்த விஜயன் ஒரு காலத்தில் ஸ்டேடியம் வாசலில் கோலி சோடா விற்றிருக்கிறார்.

அட்லி இயக்கத்தில் விஜய் அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்த பிகில் படத்தில் வில்லனாக நடித்தவர் ஐஎம் விஜயன். அப்பா மைக்கேல் ராயப்பனை ரயில் நிலையத்தில் வைத்து கொலை செய்தவர் விஜயன் தான். அவர் தமிழ் தவிர்த்து மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். படங்களில் கொடூர வில்லனாக நடித்து வரும் விஜயன் நிஜத்தில் ஒரு போலீஸ் உயர் அதிகாரி ஆவார்.

ஐஎம் விஜயன் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் ஆவார். 2000ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை இந்திய கால்பந்து அணியின் கப்டனாக இருந்திருக்கிறார். கால்பந்தாட்ட வீரராக வேண்டும் என்று ஆசைப்பட்ட விஜயனுக்கு வறுமை ஒரு பெரும் பிரச்சனையாக இருந்தது. அவர் பள்ளியில் படித்த காலத்தில் திருச்சூர் முனிசிபாலிட்டி கார்பரேஷன் ஸ்டேடிய வாசலில் கோலி சோடா விற்றிருக்கிறார். ஸ்டேடியத்தில் நடக்கும் போட்டிகளை பார்த்து ரசித்து தன் கனவை நிஜமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

கேரள போலீஸ் ஃபுட்பால் கிளப்பில் விளையாட விஜயனுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொண்டார். அதன் பிறகு அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. 1993, 1997, 1999 ஆகிய ஆண்டுகளில் இந்தியன் பிளேயர் ஆஃப் தி இயர் விருது கிடைத்தது. மேலும் கடந்த 2003ம் ஆண்டு அப்துல் கலாம் கையால் அர்ஜுனா விருது பெற்றார் விஜயன். 2006ம் ஆண்டு கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்ற விஜயன் கேரள காவல் துறையில் சேர்ந்தார்.

காவல் துறையில் சேர்ந்த விஜயனுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்புகளை அவர் இழக்க விரும்பவில்லை. இதையடுத்தே தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு துணை கமாண்டன்டாக பதவி உயர்வு கிடைத்திருக்கிறது. தனக்கு பதவி உயர்வு கிடைத்ததை புகைப்படங்களுடன் ட்வீட் செய்திருக்கிறார் விஜயன்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விஜய்யின் ‘லியோ’ இந்தி போஸ்டர் வெளியீடு

Pagetamil

‘அவளுடன் நானும் இறந்துவிட்டேன்’: விஜய் ஆண்டனி உருக்கமான அறிக்கை!

Pagetamil

நாக சைதன்யா ஜோடியாக சாய் பல்லவி

Pagetamil

தீபாவளிக்கு வெளியாகிறது துருவநட்சத்திரம்

Pagetamil

அமீர்கான் தம்பி ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாகிறார் சாய் பல்லவி?

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!