வடமாகாணத்தில் இன்று 42 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். மனனார் மாவட்டத்தில் 25 பேரும், யாழ் மாவட்டத்தில் 17 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைகழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 658 பேரின் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இதில் 42 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 24 பேரும், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேரும், மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், யாாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் 3 பேரும், சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1