உப்புமா என்றாலே தெறித்து ஓடுகிறவரா நீங்கள்?
உப்புமாவை விட்டால் கேசரி, லட்டு, பணியாரம்… இவற்றைத் தவிர ரவையைப் பயன்படுத்தி வேறென்ன செய்துவிட முடியும்? இதுதானே உங்கள் கேள்வி இங்கே பார்க்கலாம் வாங்க?
ரவா சீஸ் கட்லெட்
தேவையானவை:
- ரவை – ஒரு கப்
- தண்ணீர் – 2 கப்
- சீஸ் – 2 க்யூப்கள் (துருவவும்)
- மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
- மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
- சீரகம் – அரை டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
- நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
- *வெந்தயக்கீரையின் செடி கீரையாகவும் விதைகள் சுவையூட்டியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
செய்முறை:
ஓர் அடி ஆழமான பானில் (pan) தண்ணீரை எடுத்துக்கொள்ளவும். அதில் எண்ணெய், ரவை, துருவிய சீஸ் தவிர மற்ற எல்லாப் பொருள்களையும் நன்கு கலந்து கொதிக்கவிடவும். கலவை கொதிக்க ஆரம்பித்ததும், ரவையைச் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். ரவை நன்கு ஒன்றுசேர்ந்து மாவு போல ஆனதும் அடுப்பிலிருந்து கீழே இறக்கி கலவையை ஒரு நிமிடம் ஆறவிடவும். பின்னர் கையில் எண்ணெய் தடவிக்கொண்டு, கைபொறுக்கும் சூட்டில் கலவையில் பாதியை எடுத்து பரப்பிக்கொள்ளவும்.
அதன்மேல் துருவிய சீஸைப் பரப்பி, மீதமிருக்கும் கலவையை அதன்மேல் சரியாகப் பரப்பி, அதன் ஓரங்களை கைகளாலேயே மென்மையாக அழுத்தி மூடவும். பின்னர் இதை விரும்பிய வடிவங்களில் வெட்டிக்கொள்ளவும். அவை ஒவ்வொன்றின் ஓரங்களையும் கைகளால் மென்மையாக அழுத்தி மூடவும். பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, வெட்டி வைத்துள்ளவற்றை பொன்னிற மாகப் பொரித்தெடுக்கவும். பின்னர் அதன்மீது கொத்தமல்லித்தழை தூவி, சாஸ் அல்லது சட்னி யுடன் சூடாகப் பரிமாறவும்.
மாலைப்பொழுதுகளில் சாப்பிடாம்.