29.5 C
Jaffna
March 28, 2024
முக்கியச் செய்திகள்

மைத்திரி மீது குற்றவியல் வழக்கு: ஆணைக்குழு பரிந்துரை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி விசாரணை ஆணையக்குழு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்மொழிந்துள்ளது.

ஆணைக்குழுவின் அறிக்கை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. பின்னர், நாடாளுமன்ற நூலகத்தில் அறிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

ஆதாரங்களின் அடிப்படையில், தாக்குதல்கள் தொடர்பான செயல்கள் அல்லது குறைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பில் குற்றவியல் பொறுப்பு உள்ளது என கருதுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தண்டனைச் சட்டத்தில் எந்தவொரு பொருத்தமான ஏற்பாட்டின் கீழும் மைத்திரிபால சிறிசேனாவிற்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து சட்டமா அதிபர் பரிசீலிக்க வேண்டும் என்று ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜெயசுந்தர மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் முன் உள்ள ஆதாரங்களின் ஒட்டுமொத்த மதிப்பீட்டின் அடிப்படையில், பொலிஸ்மா அதிபருக்கு சஹ்ரானின் நடத்தை மற்றும் வளர்ச்சி தொடர்பாக வழங்கப்பட்ட ஏராளமான உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில் பொலிஸ்மா அதிபர் தேவையான அளவு செயல்படத் தவறிவிட்டார், அற்கான குற்றவியல் பொறுப்பை அவர் ஏற்க வேண்டும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

“முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஜெயசுந்தர நாட்டின் ஐ.ஜி.பி.யாக பயனுள்ள மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார்” என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

ஆதாரங்களின் அடிப்படையில், தாக்குதல்கள் தொடர்பான செயல்கள் அல்லது குறைகளுக்கு முன்னாள் ஐ.ஜி.பியின் தரப்பில் குற்றவியல் பொறுப்பு உள்ளது என்று ஆணைக்குழு கருதுகிறது.

தண்டனைச் சட்டத்தில் எந்தவொரு பொருத்தமான ஏற்பாட்டின் கீழும் புஜித் ஜெயசுந்தரவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து சட்டமா அதிபர் பரிசீலிக்க வேண்டும் என்று ஆணைக்குழு மேலும் பரிந்துரைத்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: மைத்திரி இன்று சிஐடியில் வாக்குமூலம்!

Pagetamil

Leave a Comment