இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளd. இதன்மூலம், மரணங்களின் எண்ணிக்கை 453 ஆக உயர்ந்துள்ளது.
இன்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு-
வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த, 75 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு, மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (22) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்த, 76 வயதான ஆண் ஒருவர், நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்ரவரி 20ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.
வலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த, 83 வயதான ஆண் ஒருவர், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்றுமுன்தினம் (21) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் குருதி விஷமடைவு அதிர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.