27.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

டிக் டொக்கில் பிரபாகரன் படத்துடனான வீடியோ வெளியிட்ட இளைஞன் கைது!

டிக் டொக் சமூக ஊடகத்தின் வழியாக விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படங்களுடன் கூடிய வீடியோவை வெளியிட்ட குற்றச்சாட்டில் 25 வயது இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் வத்தளையில் உள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் (டிஐடி) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவின் வீடியோக்களையும் படங்களையும் சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தியதாக சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முல்லைத்தீவை சேர்ந்த இந்த இளைஞன் தற்போது ஹட்டனில் வசிப்பதாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபரின் தொலைபேசியை சோதனையிட்டபோது, ​​பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பல செய்தி உள்ளடக்கங்களை அவர் தயாரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. அவர் தற்போது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் டி.ஐ.டி யால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது காவல்துறை சட்ட நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் உள்ளடக்கத்தை வெளியிடுவது, பகிர்வது அல்லது அனுப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சியில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டோர் சேவை நிலையங்களுக்கான கள விஜயம்

east tamil

A9 வீதியில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்

east tamil

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் பலி

Pagetamil

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணு லான்ஸ் கோப்ரல் பலி

east tamil

Leave a Comment