இலங்கை

சாவகச்சேரி வைத்தியசாலைக்குள்ளும் நுழைந்தது கொரோனா: விடுதியில் தங்கியிருந்த நோயாளிக்கு தொற்று!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள்ளும் கொரோனா தொற்றுடன் நோயாளியொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சுகயீனம் காரணமாக கடந்த 2 நாட்களின் முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர், இன்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மருத்துவ விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுள்ளார். அங்கு நாளாந்தம் சுமார் 20 வரையான நோயாளிகள் தங்கியிருந்துள்ளனர்.

அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, பிசிஆர் மாதிரி பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இன்றைய பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று உறுதியானது.

மருத்துவ விடுதியில் பல நோயாளர்கள் தங்கியிருந்தமை, வைத்தியர்கள் உள்ளிட்ட மருத்துவதுறையினர் அங்கு வந்து சென்றமை போன்ற காரணங்களினால் பலர் தனிமைப்படுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தரமற்ற ஊசி மருந்தினால் மற்றொரு நோயாளி பலி

Pagetamil

கிராம உத்தியோகத்தர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் அதிகரிப்பு

Pagetamil

2024 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல்

Pagetamil

நாகபூசணி அம்மன் திருவிழா முன்னாயத்த கூட்டம்

Pagetamil

வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிவப்பு எச்சரிக்கை

Pagetamil

Leave a Comment