கிம் கர்தாஷியனும், பாடகர் கன்யே வெஸ்ட் பிரிவிற்கான காரணம் வெளியாகியுள்ளது.
அமெரிக்க நடிகையும், மொடலுமான கிம் கர்தாஷியனும், பாடகர் கன்யே வெஸ்ட்டும் காதலித்து கடந்த 2014ம் ஆண்டு இத்தாலியில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களாக அவர்கள் பிரிந்து வாழ்வதாக பேசப்பட்டது. இந்நிலையில் கன்யே வெஸ்ட்டிடம் இருந்து விவாகரத்து கோரி விண்ணப்பித்திருக்கிறார்.
இந்நிலையில் கிம்மும், கன்யே வெஸ்ட்டும் பிரிய என்ன காரணம் என்பது தெரிய வந்திருக்கிறது.
கடந்த 2018ம் ஆண்டு அடிமைத்தனம் குறித்து கன்யே வெஸ்ட் தெரிவித்த கருத்து கிம் கர்தாஷியனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். அப்பொழுது தான் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதாம். அந்த பிரச்சனை ஒரு வழியாக தீர்ந்த நிலையில் கன்யே வெஸ்ட் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது கிம்மை எரிச்சல் அடைய செய்ததாம்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது தங்களின் மூத்த மகள் நார்த் கருவில் இருந்தபோது அவரை கலைக்க விரும்பியதாக கன்யே வெஸ்ட் தெரிவித்தார். அவ்வாறு கூறியதுடன் அனைவர் முன்பும் அழுதார். கன்யே வெஸ்ட் தங்கள் மூத்த மகள் பற்றி அப்படி பேசியது கிம்மை கோபம் அடையச் செய்ததாம்.
மகள் நார்த் வளர்ந்த பிறகு இது குறித்து செய்திகளில் படித்தால் அவர் எப்படி பாதிக்கப்படுவார் என்று கிம் கர்தாஷியன் வருத்தப்பட்டாராம். பர்சனல் விஷயங்களை கன்யே வெஸ்ட் பொதுவெளியில் பேசியது தான் கிம்மின் கோபத்தை அதிகரிக்கச் செய்ததாம்.
மகளை பற்றி பேசியதை அடுத்து கிம், கன்யே இடையேயான பிரச்சனை பெரிதாக இருவரும் பிரிந்து வாழும் அளவுக்கு சென்றதாம். இம்முறை எதையும் மறந்து, கன்யேவை மன்னிக்க கிம் தயாராக இல்லையாம். இதையடுத்தே விவாகரத்து கோரி விண்ணப்பித்திருக்கிறார் கிம் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.