உயிர்த்த ஞாயிறு தொடர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் பிரதி இன்று (23) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தின் இயக்குநர் ரிகூப்த ரோஹனதீர அறிக்கையை ஒப்படைத்தார்.
பிரதி இப்போது நாடாளுமன்ற நூலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை நேற்று சிங்கள மொழிபெயர்ப்புடன் அமைச்சரவையில் ஒப்படைக்கப்பட்டு இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அறிக்கையின் 300 பிரதிகளை அச்சிட சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார். அவை நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு வழங்கப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1