இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அலரி மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
முகவர் நிலையங்கயின் ஊடாக தகவல் பரிமாற்றத்தின் மூலம் ஆயுதம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கையெடுக்க இரண்டு நாடுகளும் இணங்கின.
இதனை தொடர்ந்து, இரண்டு நாடுகளிற்கிடையிலும் உடன்பாடு கைத்தாத்தானது.
சுற்றுலா, முதலீடு, கைத்தொழில் அனுபவம் மற்றும் கல்வி தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1