26.6 C
Jaffna
December 9, 2024
Pagetamil
இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலையில் 97 நாள் சிகிச்சை பெற்ற சிசு குணமடைந்து வீடு சென்றது!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களும் தாதியர்களும் 600 கிராமுக்கும் குறைவான எடையுள்ள குழந்தையை 90 நாட்கள் கடின உழைப்பால் மீட்டெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் முதிர்ச்சியற்ற குழந்தை பிரிவின் பொறுப்பாளர் நிபுணர் வைத்தியர் தீபால் நவரத்ன, மருத்துவ ஊழியர்களின் கடின முயற்சியால் குழந்தை மீட்டெடுக்கப்பட்டது.

பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒக்டோபர் 17 ஆம் திகதி பிரசவ வலி காரணமாக மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட பின்னர் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

கர்ப்பிணிப் பெண்ணின் கர்ப்ப காலம் 35 வாரங்கள் என்றாலும், இந்த பெண் 24 வாரங்களில் பிரசவித்தார்

புதிதாகப் பிறந்த குழந்தையின் எடை 600 கிராமுக்கும் குறைவானது. எனினும், 97 நாட்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் மருத்துவ மேற்பார்வையின் கீழ் சிகிச்சையளிக்கப்பட்டது. சமீபத்தில் வீடு திரும்பியபோது குழந்தையின் எடை சுமார் 1.6 கிலோகிராம்.

குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியர் தீபால் நவரத்ன தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பொலிஸ் சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டதால் விபரீதமா?: அல்லைப்பிட்டியில் பெண்களுக்கு நேர்ந்த கதி!

Pagetamil

பேரன் பகிடியாக தள்ளியதால் 91 வயது மூதாட்டி உயிரிழப்பு: யாழில் சம்பவம்!

Pagetamil

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜெ. எஸ் அருள்ராஜ்

east pagetamil

கிளாலி மக்களுக்கான குடிநீர் இணைப்புக்கான நடமாடும் சேவை

Pagetamil

லொஹான் ரத்வத்த பிணையில் விடுதலை

Pagetamil

Leave a Comment