இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது.
இந்த பேச்சுவார்த்தைகளின் போது வடக்குகிழக்கின் அபிவிருத்தி தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை மீள வலியுறுத்தியுள்ள தூதுவர் 13வது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வு என்பதையும் வலியுறுத்தியுள்ளார்என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மாவை சேனாதிராசாவை தமிழ் பக்கம் தொடர்பு கொண்டு வினவியபோது, வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடினோம். இந்திய முதலீட்டில் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் நிபுணர்குழுவொன்றை நியமிப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. அந்த குழு தொடர்பில் ஆராய்ந்தோம்.
தமிழ் மக்கள் தொடர்பில் இந்த அரசின் அணுகுமுறை மற்றும் தீர்வு விடயம் தொடர்பில் ஆராய்ந்தோம்.
அத்துடன், இந்தியாவின் பாதுகாப்பு விடயங்களிற்கு குந்தகமாக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது என்றார்.