ஹபரண பகுதியில் பேஸ்புக் மதுபான விருந்தில் ஈடுபட்ட 16 ஆண்களையும் பெண்ணையும் இன்று (22) ஹபரண பொலிசார் கைது செய்தனர்.
நேற்றிரவு ஹபரண நீர்த்தேக்கத்தின் அண்மையிலுள்ள விடுதியில் விருந்து நடைபெற்றது. அது இன்று காலை வரை தொடர்ந்தது என்று ஹபரண பொலிசார் தெரிவித்தனர்.
குருநாகலைச் சேர்ந்த 29 வயதுடைய ஒரு பெண்ணும், 16 ஆண்களும் கைதாகினர். அவர்கள் 22 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள்.
ஹபரண, கெக்கிராவ, திருகோணமலை, மாத்தறை மற்றும் குருநாகல் பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1