வாட்ஸ்அப் நிறுவனம் மேம்பட்ட தனியுரிமைக்கொள்கைக்கான புதுப்பிப்பை விரைவில் வெளியிட இருப்பதாக தெரிவித்து உள்ளது.
புதிய – தனியுரிமைக்கொள்கை விரைவில் புதுப்பிப்பு வெளியிடும் வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் நிறுவனம் வரும் வாரங்களில் மேம்படுத்தப்பட்ட பிரைவசி பாலிசியை மீண்டும் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சில வாரங்களுக்கு முன் வாட்ஸ்அப் வெளியிட்ட புது அப்டேட்டிற்கு உலகளாவிய பயனர்கள் பெரும் எதிர்ப்பை தெரிவிதித்தனர்.
பின் புது அப்டேட் பற்றி வாட்ஸ்அப் நீண்ட விளக்கம் அளித்தது. மேலும் புதிய மாற்றங்களுக்கு பயனர்கள் ஒப்புதல் வழங்க மே 15, 2021 எனும் புதிய காலக்கெடுவை பிறப்பித்தது. இத்துடன் வாட்ஸ்அப் தனது பயனரின் தனிப்பட்ட குறுந்தகவல், குழுக்களில் பகிரப்படும் குறுந்தகவல் உள்ளிட்டவைகளை பார்க்க முடியாது என தெரிவித்தது.
மேலும் பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் வியாபார அம்சத்தை கையாண்டு, வியாபாரங்கள் புது சேவைகள் மற்றும் அம்சங்களை இயக்க வழி செய்வதாக வாட்ஸ்அப் தெரிவித்தது. முன்னதாக ஜனவரி மாதத்தில் பயனர்கள் மேம்பட்ட பிரைவசி பாலிசியை ஏற்றுக் கொண்டால் மட்டுமே செயலியை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து பலர் வாட்ஸ்அப் செயலியை அன்-இன்ஸ்டால் செய்து டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகளை பயன்படுத்த துவங்கினர். பின் வாட்ஸ்அப் சர்ச்சைக்குள்ளான பிரைவசி பாலிசி பற்றிய விளக்கத்தை உலகம் முழுக்க விளம்பரங்கள் வாயிலாக பயனர்களுக்கு தெரிவித்து வருகிறது.