பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசத்துக்கு சொந்தமான வளங்களை யாரவது அழித்தால் அல்லது சிதைத்தல் அல்லது உருமாற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் உள்ளூராட்சி மன்றதிற்கு சொந்தமான வீதிகளில் சபையின் அனுமதி இன்றி வளப்பரிமாற்றம் செய்தால் உள்ளூராட்சி சட்டத்தின் அடிப்படையில் வழக்குத்தாக்கல் செய்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார்.
பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் கச்சார்வெளி, செல்வபுரம் பகுதியில் மக்களின் அன்றாட பிரச்சனைள் மற்றும் 2021 ம் ஆண்டுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக இன்று கச்சார்வெளி பொதுநோக்கு மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.
இங்கு கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேலும் குறிப்பிடுகையில் பிரதேச வளங்களை பாதுகாக்கும் மிக பெரிய பொறுப்பு மக்களால் தெரிவு செய்யப்பட்ட எங்களிடம் உள்ளது ஆனாலும் உங்களுடைய ஒத்துழைப்புக்கள் இன்றி நாம் எதுவும் செய்துவிட முடியாது அத்துடன் மக்களும் இயற்க்கை வழங்கள் பற்றி அக்கறை கொண்டு அதை பாதுகாத்து எமது எதிர்கால சந்ததிக்கு கையளிக்கவேண்டும் என்றார்.
இக் கலந்துரையாடலில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உபதவிசாளர் கஜன் உறுப்பினர்கள் ரமேஷ், வீரவாகுதேவர் கிராமத்தின் அமைப்புக்கள் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.