26.6 C
Jaffna
December 9, 2024
Pagetamil
இலங்கை

நெல் காயவிடும் இடமில்லாமல் மன்னாரில் அவதி!

மன்னாரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக முசலி, நானாட்டான், மாந்தை மேற்கு, மடு போன்ற பிரதேசங்களில் பெருமளவில் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

தற்போது அறுவடை காலம் ஆரம்பித்து உள்ளதினால் மழை காரணமாக அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ள போதும், அறுவடை செய்த நெல்லை காய வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக விவசாயிகள் அறுவடை செய்த தமது நெல்லை காய வைக்க உரிய ‘தளம்’ இல்லாத நிலையில் வீதிகளில் நெல்லை காய வைக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகி உள்ளனர்.

கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக விவசாயிகள் அறுவடை செய்த நெல் மழையில் நனைந்துள்ளது.

இதனால் மன்னார் மாவட்ட விவசாயிகள் தமது நெல்லை காய வைத்து விற்பனை செய்ய பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பொலிஸ் சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டதால் விபரீதமா?: அல்லைப்பிட்டியில் பெண்களுக்கு நேர்ந்த கதி!

Pagetamil

பேரன் பகிடியாக தள்ளியதால் 91 வயது மூதாட்டி உயிரிழப்பு: யாழில் சம்பவம்!

Pagetamil

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜெ. எஸ் அருள்ராஜ்

east pagetamil

கிளாலி மக்களுக்கான குடிநீர் இணைப்புக்கான நடமாடும் சேவை

Pagetamil

லொஹான் ரத்வத்த பிணையில் விடுதலை

Pagetamil

Leave a Comment