27.9 C
Jaffna
December 10, 2024
Pagetamil
இலங்கை பிரதான செய்திகள் முக்கியச் செய்திகள்

O/L சித்தியடையாதவர்கள் தீர்மானிக்க முடியாது: கோட்டாவின் குழுவை நிராகரித்தார் கர்தினால்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவை, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரித்துள்ளார். ஓ.எல் பரீட்சையும் சித்தியடையாதவர்கள் இதனை தீர்மானிக்க முடியாது என அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்ற நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி சென். செபஸ்டியன் தேவாலயத்திற்கு முன்னால் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நேற்று (20) ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

இதன் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை மாற்றுவதற்காகவா ஜனாதிபதி புதிய குழுவை நியமித்துள்ளார்.

ஆணைக்குழுவின் அறிக்கையொன்றை நான் கோரியுள்ளேன் என தெரிவித்த அவர் ஆணைக்குழுவின் முழு அறிக்கையையும் பகிரங்கப்படுத்த வேண்டும்.

அத்துடன் குறித்த அறிக்கையில் இருப்பதை மறைக்க வேண்டிய தேவையில்லை அவற்றை வெளிப்படுத்த வேண்டும்.

கடந்த ஒன்றரை வருடங்களாக குறித்த தாக்குதல் தொடர்பில் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை தயாரித்திருந்தது.

அரசாங்கம் எவ்வித அச்சமுமின்றி மக்களுக்கு அந்த ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவில் எமக்கு நம்பிக்கையில்லை. இந்த ஆணைக்குழு அறிக்கை ஐந்து உயர்ந்த அறிவார்ந்த நபர்களால் தயாரிக்கப்பட்டது, O/L கூட சித்தியடையாத ஒரு குழு இதைப்பற்றி முடிவு செய்ய நாங்கள் எவ்வாறு அனுமதிக்க முடியும்” என்று கர்தினால் மெல்க்கம் ரஞ்சித் ஆண்டகை ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவித்தார்.

No description available.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையை படித்து, மார்ச் 15 ஆம் திகதிக்குள் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியினாலல் நேற்று முன்தினம் ஒரு குழு நியமிக்கப்பட்டது. அமைச்சர் சாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழுவில், அமைச்சர்கள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உதய கம்மன்பில, ரமேஷ் பதிரன, பிரசன்னா ரனதுங்க மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காஸ் சிலிண்டர் தேசியப்பட்டியல் எம்.பியாகிறார் பைசர் முஸ்தபா

Pagetamil

38A யின் கீழ் காணி சுவீகரிக்க நடவடிக்கை

east pagetamil

மூங்கிலாறு வீதியை புனரமைக்கக் கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை

east pagetamil

LIOC நிறுவனத்தின் அதிகாரிகள் கிழக்கு மாகாண ஆளுனருடன் சந்திப்பு

east pagetamil

யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

Pagetamil

Leave a Comment