26.2 C
Jaffna
February 17, 2025
Pagetamil
உலகம்

முன்பு தெருவில்; தற்போது கோடீஸ்வரர்: சமூக வலைதளங்களில் வைரலாகும் அமெரிக்க இளைஞரின் வெற்றிக் கதை

குடும்ப வறுமையின் காரணமாக இரண்டு வருடங்களுக்கு முன் தன் தாயுடன் வீதியில் வசித்து வந்த பிராடன் கோண்டி தற்போது இலட்சங்களில் சம்பாதித்து வருகிறார்.

அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தைச் சேர்ந்தவர், பிராடன் கேண்டி (25). இளம் வயதிலேயே தனது தந்தையை இழந்து, வறுமையான நிலையில் தன் தாயுடன் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் அவரது தாயாரின் வேலையும் போக, வாடகை செலுத்த முடியாமல் வீதியில் தங்கி உள்ளனர்.

இந்த நிலையில், பிராடன் தனது ஏழ்மை நிலை மாற வேண்டும் என்றும், விரைவில் தனது தாய்க்கு பெரிய வீடு வாங்கித் தர வேண்டும் என்ற நம்பிக்கையுடன் தனது கனவை அடைய பயணித்திருக்கிறார். தனது 15 வயதுதொட்டு பல ஹொட்டல்களில் பணி புரிந்திருக்கிறார் பிராடன்.

இதன் பின்னர் பிராடனின் திருப்புமுனையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தை மார்க்கெட்டிங்குக்காக பயன்படுத்தி தற்போது இலட்சங்களில் சம்பாதிக்கத் தொடங்கி இருக்கிறார். தற்போது, பிராடன் பெயரில் கம்பெனி ஒன்றையும் அவர் ஆரம்பித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தனக்கும், தனது தாய்க்கும் சொந்தமாக வீடு வாங்கி உள்ளார். இராண்டு வருடத்தில் தான் நிர்ணயித்த இலக்கை அடைந்திருக்கிறார் பிராடன்.

குறுகிய காலத்தில் தனது இலக்கை எட்டிய பிராடனின் வாழ்க்கை தற்போது அமெரிக்க சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

தனது வெற்றிப் பயணம் குறித்து பிராடன் கேண்டி கூறும்போது, “எனது தாய் நிறைய உழைத்தார். அன்பு செலுத்தினார். ஆனால் அப்போதைய நிலை எங்களை மேலும் வலிக்கு ஆழ்த்தியது. அந்த நேரத்தில் எனது தாயின் வேலை பறிபோனது. 12 மணி நேரத்துக்குள் நாங்கள் எங்கள் வீட்டை காலி செய்ய வேண்டும் என எங்களுக்கு நோட்டீஸ் வந்தது. அப்போது நாங்கள் பொது கழிப்பிடங்களிலும், எங்களது நண்பர்கள் வீடுகளிலும் தங்கினோம். அந்த நேரத்தில் எனக்குப் பயமும், நம்பிக்கை இழப்பும் ஏற்பட்டது. எனது வாழ்க்கையில் யாருக்கும் அந்த நிலை எற்படக் கூடாது என்று எண்ணினேன் “ என்று தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வீதியில் சென்றவர் மீது அவுஸ்திரேலியாவில் கத்தி குத்து

east tamil

நேபாள சுற்றுலா கண்காட்சியில் தீவிபத்து : துணை பிரதமர் உட்பட பலர் காயம்

east tamil

‘முதுகுக்குப் பின்னால் எட்டப்படும் ஒப்பந்தங்களை ஏற்கமாட்டோம்’: உக்ரைன் ஜனாதிபதி!

Pagetamil

அமெரிக்காவில் 10000 அரச ஊழியர்கள் பணி நீக்கம்

east tamil

அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா – டிரம்ப்

east tamil

Leave a Comment