முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பேணாமை போன்ற காரணங்களினால் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன, இதனை தெரிவித்தார். கடற்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் மொத்தம் 3,202 பேர் இதே குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
தனிமைப்படுத்தல் விதிமுறைகள் தொடர்பான செயல்பாடுகள் இன்றும் மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக வீடுகளை விட்டு வெளியேறுவதாக தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைப்பதாகவும், நாட்டில் உள்ள சட்டங்களுக்கு இணங்க செயற்படுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்வதாகவும் டிஐஜி கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1