கோவில் – 19 நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் பழ.நெடுமாறன் நலம் பெற வேண்டி இன்று நல்லூரில் சிறப்பு வழிபாடு இடம்பெற்றது.
கொவிட்-19 தொற்றினால் சில தினங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 83 வயதான பழ நெடுமாறன் இலங்கைத் தமிழ் மக்களின் மீது தீவிர பற்று கொண்டவர்.
தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவராகிய பழ நெடுமாறன் விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவதற்கு இந்த சிறப்பு வழிபாடு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று காலை இடம்பெற்றது.
சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தலைமையில் இடம் பெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும், ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமுமான அனந்தி சசிதரனும் கலந்து கொண்டார்.

ஈழத்தமிழர் போராட்டத்தில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தன்னை அர்ப்பணித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர் பழ.நெடுமாறன் என்பது குறிப்பிடத்தக்கது.