பருத்தித்துறையில் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை ஒருவருக்கே தொற்று உறுதியாகியுள்ளது.
ஆசிரியையின் வீட்டிற்கு திருகோணமலையிலிருந்து வந்து சென்ற ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார். இதையடுத்து, திருகோணமலை சுகாதார பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஆசிரியை கடந்த வாரம் பாடசாலைக்கு சென்றிருந்தார். பின்னர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டதில், தொற்று உறுதியாகியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
8
+1
1