2020ஆம் ஆண்டில் வேலையற்ற பட்டதாரிகளிற்கு நியமனம் வழங்குவதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
2020 ஆம் ஆண்டில் 60,000 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்குவதாக தற்போதைய அரசாங்கம் உறுதியளித்த போதிலும், வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்று சங்கத்தின் தலைவர் ஞானானந்த தேரர் கூறினார்.
“அரசாங்கமும் அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும் உறுதிமொழியை நிறைவேற்றியதை போல இப்போது செயல்படுகிறார்கள். கடந்த காலத்தில் எங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க வீதிகளில் இறங்க வேண்டியிருந்தது, எனவே ஆர்ப்பாட்டங்களுக்கு தயங்க மாட்டோம்“ என அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரங்களில் தலையிட்டு வேலையில்லாத பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்குமாறு ஜனாதிபதியையும் பிரதமரையும் அவர் வலியுறுத்தினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1