30.5 C
Jaffna
April 17, 2024
இலங்கை

நெடுந்தீவில் 2 மீனவர்கள் மாயம்: படகு மட்டும் மீட்பு!

குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவிற்கு பயணித்த படகிலிருந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். மீனவர்கள் இல்லாத நிலையில் படகு மாத்திரம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (21) பகல் 1.45 மணியளவில் குறிகட்டுவானில் மீன் இறக்கி விட்டு, நெடுந்தீவுக்கு திரும்பியவர்களே காணாமல் போயுள்ளனர்.

நெடுந்தீவு 6ஆம் வட்டாரத்தை சேர்ந்த மரியநாயகம் அமலன் மேயன் (20), நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த எஸ்.ரொபின்சன் (40) ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளனர்.

அவர்கள் காணாமல் போனதையடுத்து, நடத்தப்பட்ட தேடுதலில் அவர்கள் பயணித்த படகு நெடுந்தீவு கரையில் மீட்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கையில் ஒருவரின் மாதாந்த அடிப்படை தேவை செலவு ரூ.16,975

Pagetamil

ரூ.1900 கொத்துக்கடை உரிமையாளருக்கு பிணை!

Pagetamil

சிறிமாவோவின் பிறந்தநாள்

Pagetamil

மியான்மரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு!

Pagetamil

‘வெளிநாட்டிலிருந்து வந்தவருடன் சேர்ந்து பொலிசார் தாக்கினர்’: வவுனியாவில் குடும்பஸ்தர் முறைப்பாடு!

Pagetamil

Leave a Comment