26.7 C
Jaffna
December 11, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

தமிழ் கட்சிகளின் கூட்டு தமிழ் தேசிய சபையாக உருவாகிறது!

தமிழ் தேசிய சபையென்ற பெயரில் சேர்ந்து இயங்க தமிழ் தேசிய கட்சிகளிற்கிடையில் கொள்கையளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய கட்சிகள் இன்று (21) யாழ்ப்பாணத்தில் கூடிய போது இந்த இணக்கம் எட்டப்பட்டது.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் இன்று தமிழ் தேசிய கட்சிகள் சந்தித்து கலந்துரையாடின. தமிழ் அரசு கட்சியின் சார்பில் சீ.வீ.கே.சிவஞானம், புளொட் சார்பில் பா.கஜதீபன், ரெலோ சார்பில் விந்தன் கனகரட்ணம், சபா குகதாஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் சிவநாதன், தமிழ் தேசிய கட்சி சார்பில் சிறிகாந்தா, சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் சார்பில் பொ.ஐங்கரநேசன் ஆகியோருடன், ஜனநாயக போராளிகள் கட்சி, மார்க்சிச லெனினிச கட்சி ஆகியனவும் இன்று சந்திப்பில் கலந்து கொண்டன.

இதன்போது, அனைத்து கட்சிகளும் கூட்டாக இணைந்து செயற்பட தமிழ் தேசிய சபை என்ற கூட்டு பிரேரிக்கப்பட்டது.

விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி கட்சிகள் அதை ஏற்றுக்கொண்டன. தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் 27ஆம் திகதி இடம்பெறவுள்ளதால் அதில் கலந்துரையாடி முடிவை சொல்வதாக அறிவிக்கப்பட்டது. புளொட் கூட்டு முயற்சியை ஏற்றுக்கொண்டது. ஏனைய தரப்புக்களும் ஏற்றுக்கொண்டன.

எனினும், ரெலோ தரப்பில் இந்த கூட்டங்களில் முக்கிய பிரதிநிதிகளை அனுப்பாமல் தவிர்த்து வந்தது. தமிழ் தேசிய கட்சிகள் பல முறை கூடிய போதும், ரெலோ தலைவர் செல்வம் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை. உள்ளூராட்சி பிரதிநிதிகளைத்தான் அனுப்பி வந்தது. இம்முறைதான் மூத்த உறுப்பினர் விந்தன் கனகரட்ணம், மற்றும் சபாகுகதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடல்களிற்கு உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகளை அனுப்புவதற்கு ஏனைய கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்தன. இந்த கலந்துரையாடல்களின் கனதியை குறைக்க முயற்சிக்காமல் செயற்படுமாறும், கூட்டு முயற்சியில் விரும்பமில்லா விட்டால் செல்வம் அடைக்கலநாதனை வெளியேறுமாறும், அவரை கட்டாயப்படுத்தி இந்த கூட்டத்திற்கு யாரும் அழைக்கவில்லையென்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

தமிழ் தேசிய சபைக்கு ரெலோவின் சம்மதம் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை.
தமிழ் தேசிய சபையை கட்டமைக்க, யாப்பு மற்றும் வடிவங்களை உருவாக்க சீ.வீ.கே.சிவஞானம், சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதன் தலைமை கட்டமைப்புக்களை பின்னர் ஆராயலாமென முடிவெடுக்கப்பட்டது.

எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் கட்சிகள் சந்திக்கவுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் ஒதுங்கி, புதியவர்களுக்கு வழிவிட யோசனை: புதிய அணிகள் இணைய பேச்சு!

Pagetamil

சிரியா முன்னாள் ஜனாதிபதி அசாத் பற்றிய மர்மம் விலகியது: ரஷ்யா புகலிடம் அளித்துள்ளது!

Pagetamil

சிரியா தலைநகரும் கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது: அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி முடிந்தது!

Pagetamil

திருத்தப்பட்ட அரசி விலைகள் அறிவிப்பு!

Pagetamil

இலங்கை தமிழ் அரசு கட்சியுடன் கூட்டணிப் பேச்சு… விந்தன் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்: ரெலோ தலைமைக்குழு தீர்மானம்!

Pagetamil

Leave a Comment